எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.

ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே “ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் அவர்களின் 30 வயது வரை பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்களாம். 30 வயதை கடந்த பின்னர் அவர்களை யாராலும் கையால் பிடிக்க முடியாதாம். அப்படியானவர்கள் பிறந்த தேதி என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Numerology: இவங்களுக்க 30 வயதிற்கு மேல் ஜாக்போட்.. நீங்க பிறந்த தேதியும் இருக்கா? | These Date Born People Are Wealthiest After 30S

எண் 1 

எண் 1-ல் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவார்கள். இவர்கள் மற்ற எண்களில் பிறந்தவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.எப்போதும் பிரகாசத்துடன் இருக்கும் இவர்களை ஒரு விடயத்தை செய் என்றால் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். உங்கள் வீடுகளில் எண் 1-ல் பிறந்தவர்கள் இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். வாழ்க்கையின் உச்சிற்கே சென்று விடுவார்கள். சில சமயங்களில் காலநிலை சரியில்லாமல் இருந்தால் 30 வயதை கடந்த பின்னர் சூரியன் போன்று பிரகாசமாக ஜொலிப்பார்கள்.

எண் 5   

எண் 5-ல் பிறந்தவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகமாகவே இருக்கும். உங்களுடைய கருத்துக்களை எந்தவித பயமும் இல்லாமல் இவர்களிடம் கூறலாம். தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிகமான நாட்டம் கொள்வார்கள். 30 வயதிற்கு பின்னர் அமோகமான வாழ்க்கை வாழ்வார்கள்.  

எண் 8

எண் 8-ல் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இவர்களுக்கு எப்போதும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையே அதிகமாக இருக்கும். இவர்கள் நீண்ட கால முதலீடுகளில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். 30 வயது கடந்த பின்னர் ஞானம் வந்தவர்கள் போன்று நடந்து கொள்வார்கள்.