இலங்கை மிக அழகான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டில் இல்லாத வளங்களே இல்லை.

பச்சை கம்பளம் விரித்தால் போல் இருக்கும் மலைகள், 24 மணி நேரம் கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், பறவைகளின் ஹோட்டல்கள் அதிகமாக இருக்கும் காடுகள் இப்படி இலங்கையின் அழகை கூறிக் கொண்டே செல்லலாம்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரவை முக்கிய வருவாயாக பார்க்கிறது. பயணிகள் குடும்பத்தினருடன் வந்து சுற்றி பார்க்கும் அளவுக்கு அனைத்து வசதிகளையும் பயணிகள் உலாவும் இடங்களில் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது.

அந்த வகையில் புதிதாக டேட்டிங் செல்ல ஆசைப்படுபவர்கள் உங்கள் துணையுடன் இலங்கைக்கு செல்லலாம். உங்கள் பட்ஜெட்டில் சுற்றிப் பார்க்கும் அளவுக்கு நிறைய இடங்கள் இலங்கையில் உள்ளது.

கொழும்பில் அவுட்டிங் போகணுமா? அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இதோ! | Best Places To Date In Sri Lanka In Tamil

உதாரணமாக சின்னத்திரை பிரபலங்களான, ரக்ஷிதா மகாலட்சுமி, வி.ஜே பார்வதி இன்னும் சிலர் இலங்கை வருவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

இது போன்ற பயணிகளை ஈர்க்கும் இடங்கள் சிலவற்றை தொடர்ந்து எமது பதிவில் நீங்கள் பார்க்கலாம்.    

1. சினமன் கிராண்ட் ஹோட்டல்

உங்களுடைய துணையுடன் இலங்கை வந்தால் இந்த உணவகத்தில் நீங்கள் அறைகள் எடுத்து தங்கலாம். அத்துடன் ஆடம்பரமான இரவு உணவையும் உங்கள் துணையுடன் பங்கிட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான அலங்காரத்தை அங்குள்ளவர்கள் தயார் செய்து தருவார்கள். இரவு 7 மணி முதல் 11 மணி வரை உங்களுடைய துணையுடன் நேரத்தை கழிக்கலாம். 

கொழும்பில் அவுட்டிங் போகணுமா? அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இதோ! | Best Places To Date In Sri Lanka In Tamil

2. Tintagel Colombo

டின்டெகல் கொழும்பு என அழைக்கப்படும் இந்த இடத்தில் இலங்கையின் தனித்துவமான அழகை பார்க்கலாம். உங்களுடைய துணையை கவரும் வகையில் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். சிறந்த நாளாக மாற்றும் இந்த டின்டெகல் கொழும்பு என்ற இடத்தில் மாலை 6.30 க்கு மேல் செல்லலாம். ஆரம்ப கட்டணம் ரூ.8000 என கொடுக்கப்பட்டுள்ளது.  

 

கொழும்பில் அவுட்டிங் போகணுமா? அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இதோ! | Best Places To Date In Sri Lanka In Tamil

3. ப்ரீஸ் பர்ராகுடா

உங்கள் துணைக்கு கடற்கரை காட்சி மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லலாம். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சிறப்பு கவனிப்பு இங்கு கொடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் சிறந்த கவனிப்பை பெற்று வரும் இந்த இடம் உங்கள் துணைக்கு மிகவும் பிடிக்கும்.   

கொழும்பில் அவுட்டிங் போகணுமா? அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இதோ! | Best Places To Date In Sri Lanka In Tamil