ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிககளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களின் வாழ்க்கைக்கு கட்டுப்படாதவர்களாகவும், தாங்கள் செய்வது தான் சரி என்ற அகங்காரத்துடன் இருப்பார்கள்.

அப்படி பிறப்பிலேயே சற்று அகந்தையுடன் இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்த பெண்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பிலேயே ஆடம்பர மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவர்களின் பேச்சில் ஒரு ஆணவம் இருக்கும். யார் சொல்லுக்கும் அடங்காதவர்களாக நடத்துக்கொள்வதால், வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும்.
இவர்கள் ஒருவரை எதிரியாக நினைத்தால் ஒரு சதித்திட்டத்தில் இறங்கி, சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்ற ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்.
மீனம்

இனிமையான மற்றும் பச்சாதாபம் கொண்ட மீன ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் பழகும் போது மிகவும் இனிப்பானசர்களாக தோன்றினாலும், தங்களின் அகங்காரம் தலைத்தூக்கும் போது, மோசமான நடத்தைகளை வெளிப்படுத்துவார்கள்.
அவர்களின் இரக்கமுள்ள மற்றும் மென்மையான இயல்பு அவர்களை உண்மையிலேயே தீங்கற்றவர்களாகத் தோன்றச் செய்கிறது, ஆனால் நீங்கள் அவர்களை காயப்படுத்தினால், அவர்களின் மறுமுகத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சாக குணத்துக்கும் சுதந்திர தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பதை விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் வயதில் பெரியவர்களிடம் பேசும் போதும் கூட சற்று அதிகார தொணியில் பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பதால், பெரும்பாலானவர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள்.
அவர்கள் அடிப்படையில், நம்பிக்கையானவர்களாக இருந்தாலும், இவர்களின் அகந்தை பல நேரங்களில் ஆபத்தான பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.
