பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தன் வாழ்கை துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பத குறித்து ஒரு கனவு இருப்பது இயல்பான விடயம்.
பெரும்பாலும் பெண்கள் பணம் இல்லாவிட்டாலும் தங்களுக்கு உண்மையாகவும்,நேர்மையாகவும் நடந்துக்கொள்ளும் துணையை தான் அதிகம் எதிர்ப்பார்க்கின்றார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் ஒரு மோசமான மற்றும் பொறுப்பற்ற வாழ்க்கை துணையாக மாறிவிடுவார்களாம்.
அப்படி ஜோதிட கணிப்பின் அடிப்படையில் மோசமான கணவர்களாக அடையாளப்படுத்தப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு

சுதந்திர மனபாங்கு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், இயல்பாகவே காதல் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் காதல் உறவில் எந்தளவுக்கு ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றார்களோ அதை விட பல மடங்கு விரைவில் சலிப்படையும் தன்மையையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்களின் இந்த குணம் காரணமாக திருமண வாழ்வில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்பு காணப்படுகின்றது. மேலும் திருமணத்துப்கு புறம்பான உறவுகளில் சிக்கிக்கொள்ளவும் வலிவகுக்கும்.
கும்பம்

சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசியினர், வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால், தாங்கள் சொல்லும் அனைத்து விடயங்களுக்கும் தனது வாழ்க்கைத்துணை கட்டுப்பட வேண்டும் என்ற குணம் இவர்களிடம் இருக்கும். இது திருமண வாழ்ககையில் துணையின் மீது ஒரு ஆதிகத்தை ஏற்படுத்துவதால், பிரிவுக்கும் மன அழுத்தத்த்துக்கும் வழிகோலும்.
இந்த நபர்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கிறார்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சிகளில் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார்கள்.அதனால் திருமண வாழ்வில் முழுமையான மகிழ்ச்சி இருக்காது.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் தங்களின் இலக்குகளை அடைவதிலும், வெற்றிகளை குவிப்பதிலும் மட்டுமே அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த பண்புகள் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அவை திருமண உறவின் சூழலில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் திருமண உறவில் துணை மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம்.
இவர்கள் சமூகத்திறகு ஒரு வெற்றிகரமான நபராக இருக்க முடிகின்ற போதிலும், ஒரு நல்ல கணவராக இருக்க முடியாத நிலை ஏற்படும்.
