தற்போது இருக்கும் பெண் பிள்ளைகளின் அதீத பிரச்சனையாக இருப்பது தலையில் பேன் தொல்லையை கூறுகிறார்கள். இதற்கு வீட்டில் உள்ள பூண்டு பயன்படுத்தலாம்.

தலையில் பேன் சேர்வது மிகவும் பொதுவான விடயம். இதற்கு பயப்பட தேவை இல்லை. ஆனால் அதிகமான பேன்கள் தலையில் இருந்தால் அது கடித்து கடித்து தலையில் காயங்களை உண்டாக்கும். இதனால் தலையை பார்க்க அருவருப்பாக இருக்கும். 

இதனால் அரிப்பு ஏற்பட்டு நமது கைகள் தலையை சொறிந்துகொண்டே இருக்கும். இதற்கு காரணம் நாம் தலையை சுத்தமாக பராமரிக்காதது தான்.

பலரும் பேன் தொல்லையை விரட்ட பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு வீட்டில் இருக்கும் பூண்டு மட்டும் போதும் அதை வைத்து தலையில் உள்ள பேனை விரட்டலாம்.

தலையில் இருக்கும் பேன் தொல்லைக்கு - பூண்டு இருந்தா இதனுடன் அரைத்து பூசுங்க | Home Remedies To Get Rid Of Head Lice Tamil

பேனை விரட்டும் முறை

1. வீட்டில் இருக்கும் வேப்பிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர்  எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். இதை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து செய்யவும். இப்படி செய்து வந்தால் ஈறு, பேன் தொல்லை நிரந்தரமாக தலையில் இருந்து நீங்கிவிடும்.

2.பேன் தொல்லை அதிகமாக இருந்தால் வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை காணலாம்.

தலையில் இருக்கும் பேன் தொல்லைக்கு - பூண்டு இருந்தா இதனுடன் அரைத்து பூசுங்க | Home Remedies To Get Rid Of Head Lice Tamil

3. இரவில் நீங்கள் தூங்கும் தலையணை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகளை பரப்பி பிறகு அதன் மேல் ஒரு துணியை போட்டு தூங்கவும். இப்படி செய்தால் பேன் தொல்லை முற்றிலும் இல்லாமல் போகும்.

4.பேன்களுக்கு பூண்டின் வாசனை பிடிக்காது. எனவே பூண்டை அரைத்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் வைத்து பின்னர் எப்போது போல ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் பேன் தொல்லை முற்றிலும் ஒழிந்து விடும்.