பொதுவாகவே பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தெரிவு செய்யும் முன்னர் பல தடவைகள் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியம். காரணம் ஆண் தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில் அது அவனை மட்டுமே பாதிக்கும்.
இதுவே ஒரு பெண் வாழ்க்கை துணை விடயத்தில் தவறான முடிவை எடுத்தால், அது அவளின் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவரை முழுமையாக நம்பிவிடுவார்கள்.

ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை தங்களின் காதல் வலையில் சிக்க வைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.
அப்படி பெண்களை துன்புறுத்தும் மிகவும் மோசமாக காதலர்களாக மாறக்கூடிய ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் யாராலும் கணிக்க முடியாத இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்
இவர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், தங்களின் உள்ளுணர்வுளை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதனால் துணையிடம் எல்லாவற்றையும் மறைக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் காதல் மீது இயல்பாகவே அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருந்தாலும், ஒரே உறவில் நீண்ட நாள் நிலைக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனம் விரைவில் சலிப்படையும் தன்மை கொண்டது.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள், மனக்கிளர்ச்சியுடனும், சிந்திக்காமல் செயல்படும் தன்மையுடனும் இருப்பதால், இவர்கள் துணையிடம் உணர்வு பூர்வமான பிணைப்பில் இருக்க மாட்டார்கள்.
இவர்களிடம் இயல்பாகவே காணப்படும் அடக்கியாளும் குணம் காதலில் அழுத்தமான மற்றும் சவாலான சூழலுக்கு வழிவகுக்கும். இவர்களின் காதல் வாழ்வில் அதிக வாக்குவாதங்கள் நிகழும்.
இவர்களிடம் பச்சாதாபம் இல்லாததாலும், தங்கள் சொந்த தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும் தன்மையாலும் துணையின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசி ஆண்கள் மர்மமாக குணத்துக்கும் ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அதிகமான பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாகவும், கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பதால், இவர்களை காதலிக்கும் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியாது.
தங்கள் துணையை கையாளும் மற்றும் அவர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தும் இந்த போக்கு, உறவுகளை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றும்.இவர்கள் துணையின் தனிப்பட்ட விடயங்களிலும் அளவுக்கு மீறி தலையீடு செய்வார்கள்.
