ஜாதிட கணிப்புப்படி கையில் உழைக்கும் பணம் தேவை என்ற பெயரில் செலவாகுவதை தடுக்க ஒரு சிறந்த வழியை பார்க்கலாம்.

நமது அன்றாட உணவில் உப்பு மிகவும் அவசியம்.  உப்பு இல்லாத உணவை யாராலும் சாப்பிட முடியாது.

இந்த உப்பின் அவசியத்திற்கு ஏற்றவாறு அதே அளவு உப்பு வீட்டிற்கு அமைதி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்ல ஆற்றல்களைக் கொண்டுவருவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உப்பு சுவைக்காக மட்டுமல்ல,  எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறையை அதிகரிக்கும் இயற்கையான சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கூற்றுப்படி, உப்பு ஒரு சிறப்பு ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது என கூறுகிறார்கள்.

பணம் கைகளில் தங்குவதில்லையா? இந்த பொருளை பர்சில் வைத்து பாருங்க பணம் குவியும் | Keep This Item In Your Purse For Money Problems

ஜோதிடர்கள் கூற்றுப்படி, வீட்டில் உள்ள குறைபாடுகள், குழப்பங்கள் மற்றும் எதிர்மறை அதிர்வுகளை நீக்கி, வாழ்க்கையில் வெற்றிக்கான வழிக்கு உப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

நாம் வீட்டின் தரையைத் துடைக்கும்போது, ​​தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து துடைக்க வேண்டும். இதன் மூலம் வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வாரத்திற்கு 2-3 முறை இவ்வாறு வீட்டை சுத்தம் செய்தால் நன்மை கிடைக்கும். 

உப்பு எல்லாவற்றிற்கும் பயன்படுத்தினால் நிதி சிக்கல்களைக் குறைக்கும் மற்றும் பல தடைகளை நீக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு வீட்டின் எப்பகுதியிலும் ஒரு வெண்கலக் கோப்பையில் 4-5 கிராம்புகளை உப்புடன் சேர்த்து வைத்து விட வேண்டும். 

பணம் கைகளில் தங்குவதில்லையா? இந்த பொருளை பர்சில் வைத்து பாருங்க பணம் குவியும் | Keep This Item In Your Purse For Money Problems

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் தனலட்சுமியின் ஆசிகளைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இது நிதி சிக்கல்களைக் குறைப்பதற்கும் செல்வத்தைப் பாதுகாப்பதற்கும் உதவி செய்யும் என பல வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

இது வீட்டில் எதிர்மறை சக்தியைக் குறைத்து பணம் வருவதற்கான வழியைத் திறக்கிறது. குளியலறை என்பது வீட்டில் அதிக எதிர்மறை சக்திகள் குவியும் இடமாகும். 

எனவே ஒரு வெண்கலக் கோப்பையில் உப்பை நிரப்பி குளியலறையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் காரணம் அங்கு இருக்கும் கெட்ட சக்திகள், அசுத்தங்கள் மற்றும் திரட்டப்பட்ட எதிர்மறை அதிர்வுகள் யாவும் அந்த கணமே வெளியேறும். 

பணம் கைகளில் தங்குவதில்லையா? இந்த பொருளை பர்சில் வைத்து பாருங்க பணம் குவியும் | Keep This Item In Your Purse For Money Problems

நீங்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் ​​ஒரு கைக்குட்டையில் சிறிது உப்பைக் கட்டிக்கொண்டு நீங்கள் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இது மனதின் சுமையைக் குறைத்து, கவலைகளை நீக்கி, மனதிற்கு அமைதியைத் தருகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தில் உப்பைக் கட்டி பணப்பையில் வைத்தால், பணம் வீண் செலவாவது நின்றுவிடும்.

இது பணத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், தெய்வீக சக்திகள் எப்போதும் பணத்தை கையில் வைத்திருக்க உதவி செய்கிறது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.