ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல், திருமணம், விசேட திறமைகள் மற்றும் இவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே இசை மீது அதீத ஈர்ப்பு கொண்டவர்களாகவும் நல்ல குரல் வளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் இசை சம்பந்பந்தப்பட்டதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அப்படி இசை துறையில் சாதனை படைப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலா ராசியில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் இசைக்கலைஞராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்கள் இயற்கையிலேயே வசீகரமான குரல் வளத்தை கொண்டிருப்பார்கள்.
முறையாக பயிற்ச்சி பெறமலேயே சிறப்பாக பாடும் திறமையும், இசையமைக்கும் திறைமையும் கொண்டவர்களாக இருப்பர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் மக்களுடன் நெருங்கமான தொடர்ப்பை எளிதில் ஏற்படுத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த தனித்துவ ஆற்றல் இசை துறையில் இவர்களை சாதனையாளர்களாக மாற்றும்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இசைபிரியர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு பிறப்பிலேயே இயற்கையின் மீதும் இசையின் மீதும் அளவு கடந்த அன்பு மற்றும் ஆர்வம் இருக்கும்.
மேலும் அதிர்ஷ்டத்தைப் பற்றிப் பேசுகையில், அவர்களும் அதிர்ஷ்டசாலிகள் எனவே அவர்களின் இசை நிச்சயமாக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும். இவர்கள் இசைதுறையில் நிச்சயம் பெரிய இடத்தை அடைவார்கள்.
மீனம்

மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே சிறந்த கற்பனை திறனுக்கும் படைப்பாற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை கற்பனையிலேயே கழித்துவிடுவார்கள். தங்கள் உணர்ச்சிகளை பாடலில் வெளிப்படுத்துவதை இவர்கள் பழக்கமாக கொண்டிருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களிடம் ஒரு ஆத்மாத்தமான இசை உணர்வு இருக்கும். இவர்கள் பிறப்பிலேயே பாடகராகவே சிறந்த இசையமைப்பாளராகவே மாறுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
