ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி நட்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் குணம் கொண்டவர்களாம். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எந்த உறவில் இருந்தாலும் அவர்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இந்த ராசியினர் குடும்ப உறவுகளுக்கு கொடுக்கும் அதே அளவான முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள். இவர்கள் விசுவாசத்துக்கும், நம்பக தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு நட்புக்குள் போகும் முன்னர் ஆயிரம் முறை சிந்திப்பார்கள் ஆனால், நண்பராக நினைத்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராவிடுவார்கள்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இந்த ராசியினர் தங்கள் உறவுகளையும், உணர்வுகளையும் பாதுகாப்பதற்கு எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
சந்திரனால் ஆளப்படுவதால் இவர்களுக்கு இயற்கையிலேயே பச்சாதாபம், இரக்கம் மற்றும் அக்கறை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.நட்புக்கான தங்களின் ஆசைகளை கூட விட்டுக்கொடுக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் முழுமைக்கும் பூரணத்துவத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த உறவில் இருந்தாலும் முழுமையாக ஈடுபாட்டுடன் நடந்துக்கொள்வார்கள்.
இந்த ராசியினர் தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் மற்றவர்களுக்கு கொடுக்கவே மாட்டார்கள். நட்பு என்று வந்துவிட்டால் இவர்களை விட சிறந்தவர்கள் இருக்கவே முடியாது.
எந்த உறவிலும் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை விரும்பும் இவர்கள் நம்பகமானவர்களாகவும், விசுவாமனவர்களாகவும் ரகசியங்களைப் பாதுகாப்பதில் சிறந்தவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
