ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்பட்டது போன்ற சனி பகவான் ஒரே ராசியில் சுமாராக 2 1/2 வருடங்கள் பயணிப்பார்.

ஒழுக்கம், நேர்மை, நீண்ட ஆயுள், நோய், துக்கம் ஆகியவற்றின் முக்கிய காரணியாக பார்க்கப்படும் சனி பகவான், பெயர்ச்சி அடையும் பொழுது பலருக்கும் சோதனைகளையே தருகிறார்.

அதே போன்று கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன், பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார்.

தற்போது சனி பகவான், புதன் இருவரும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இரண்டு கிரகங்களும் வக்ர நிலையில் இருக்கும் பொழுது நாளைய தினம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதே சமயம், நவம்பர் 30 ஆம் தேதி புதன் பகவான், வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

இரண்டு கிரகங்களும் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தியடையும் பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

அதிர்ஷ்டத்தை கொடுத்து ராசியினரை சனி பகவான் பிரகாசிக்க விடுவாரா? என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

 500 வருட காத்திருப்பின் பலன்- வக்ர நிவர்த்தி நிலையில் ராசிகளை திணற விடும் சனி பகவான் | Saturn Mercury Direct On Nov 2025 Benefits

  ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டமா?  சனி- புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது ரிஷப ராசியினருக்கு பாரியளவு லாபம் கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைப்பதை விட வருமானம் அதிகமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு வரும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் வரும். 
மகர ராசியினருக்கு என்ன பலன்?  சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது உங்களுக்கு வீரம் அதிகரிக்கும். உங்களுடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை நீங்கள் காணலாம். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை கிடைக்காமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கடின உழைப்பால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகமாக இருக்கும். 
கடக ராசியினருக்கும் அதிர்ஷ்டம் வக்ர நிவர்த்தி அடையும் நேரத்தில் கடக ராசியில் பிறந்தவர்கள் புது பொலிவு பெறுவார்கள். நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் இருந்து வாய்ப்பு வரலாம். புத்திசாலித்தனத்தால் பல புதிய வருமான ஆதாரங்கங்கள் கிடைக்கும். இவ்வளவு நாட்களாக இருந்த கஷ்டங்கள் இனி இருக்காது.