பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வாங்கா கணிப்பில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தீர்க்கதரிசியான பாபா வாங்கா "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என அழைக்கப்படுகிறார்.
இவர், தன்னுடைய யதார்த்தமான கணிப்புக்களால் நடக்கவிருப்பதை முன்னரே கூறி எதிர்கால சந்ததியினரையும் கவர்ந்துள்ளார்.
கண் தெரியாமல் வாழ்ந்த பாபா வாங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும் தரிசனங்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த வகையில், இன்னும் 1 மாதத்தில் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து பாபா வாங்கா கூறிய விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

பாபா வாங்காவின் கூற்றின்படி, பிறக்கவிருக்கும் புத்தாண்டில் AI தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் அதிகமான தாக்கம் செலுத்தும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாபா வாங்கா கூறியது போன்று, ரஷ்யாவில் புதிய தலைவர் உருவாகுவார். இவர் உலக விவகாரங்களின் தலைவர் என மக்களால் கொண்டாடப்படுவார் எனக் கூறப்படுகிறது. எப்போதும் நிகழும் என சரியாக கூறப்படவில்லை.

பாபா வாங்காவின் சில கணிப்புகள், தொழில்நுட்ப சீர்குலைவு, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியன சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இதனால் பல மாற்றங்கள் ஏற்படப் போகிறது.
