கண்ணுக்கு தெரியாத சக்தியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என யாராவது கூறினால் சற்று வியப்பாக இருக்கும்.

ஏனெனின் கண்ணுக்கு தெரியாவிட்டால் பேய்கள் என்றால் பயம் கொள்ளாமல் யாரும் இருக்கமாட்டார்கள்.

அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் சமயத்தில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு மாத்திரம் அதனை பார்க்கும் அல்லது உணரும் வாய்ப்பு கிடைக்கும். இது பேய்யா? அல்லது வேறு எதுவும் சக்தியா? என்பது பலருக்கும் சந்தேகத்தை தூண்டும் விடயமாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அமானுஷ்ய செயல்களை செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களின் ராசி எதிர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கும்.

அந்த வகையில், கண்ணுக்குத் தெரியாத பேய்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் பிறந்த ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

அமானுஷ்ய சக்தியுடன் தொடர்பு வைத்திருக்கும் ராசியினர்.. இவங்களுக்கு பயமே இருக்காதா? | Who Have Strongest Ghosts Connection Zodiac Signs   

கடகம் 

. மற்ற ராசியினரை விட கடக ராசியில் பிறந்தவர்கள் ஆழமான உணர்ச்சி திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருந்து அமானுஷ்யங்கள் தப்பிக்கவே முடியாது. ஆழமான தொடர்பை தனக்கு சாதகமாக கூட சிலர் பயன்படுத்திக் கொள்வார்கள். விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தி வாழ்வதாரங்களை பார்த்து கொள்கிறார்கள்.  

விருச்சிகம்

. விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள். கண்ணுக்கு தெரியாத சக்தியை உணரும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. கவனமாக இருப்பவர்கள் அதிகம். எதிர்மறையான சக்திகளின் நடமாட்டத்தை அறிந்து, அதற்கு தேவையான விடயங்களை செய்வார்கள். 

மீனம்

. மீன ராசியில் பிறந்தவர்கள் மாய உலகின் ராஜாக்களாக இருப்பார்கள். இவர்கள் ஆன்மாக்களுடன் பயணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை புரிந்து கொண்டு, அந்த துறையில் பல சாதனைகளை செய்வார்கள். இவர்கள், ஆன்மாக்களின் வருகையை இலகுவாக கண்டு கொள்வார்கள்.