சுக்கிர பகவான் டிசம்பர் 20, 2025 அன்று விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சுமார் 12 மாதங்களுக்குப் பிறகு குருவின் ராசிக்குள் சுக்கிரன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததும், அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டப் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவர்கள்தான் | Year S Last Friday Eclipse Lucky Zodiac Signs

மேஷம்: உங்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் கூடும். தொடங்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் புதிய திசை உருவாகும். வெளிநாடு தொடர்பான காரியங்கள் கைகூடும். வெளிநாட்டில் வேலை, தொழில் விரிவாக்கம், உயர்கல்வி ஆகியவற்றைப் பெறலாம். குடும்ப உறவுகள் வலுப்பெற்று அன்னோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: புதிய நண்பர்கள் அல்லது தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் இருந்து வரன் தேடி வரும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். தொழில் மற்றும் முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் நோக்கத்திற்காக நீங்கள் செய்யும் பயணம் லாபகரமானதாக அமையும்.

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவர்கள்தான் | Year S Last Friday Eclipse Lucky Zodiac Signs

சிம்மம் வேலையிலும், தொழிலிலும் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, வருமானத்தில் திடீர் அதிகரிப்பு, புதிய ஒப்பந்தங்கள் ஆகியவை கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். கலைத்திறன் மற்றும் படைப்புத்திறன் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு:  உங்கள் பண வரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் ஈடேறும். புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் திருப்தியை காண்பீர்கள்.