நவகிரகங்களில் மிக சக்திவாய்ந்த கிரகமாக பார்க்கப்படும் சனிபகவான் வழக்கமாக அவருடைய விளையாட்டை 2026-ல் ஆரம்பிக்கப்போகிறார்.
இந்த விளையாட்டில் குறிப்பிட்ட சில ராசியினர் சிக்கவுள்ளனர். அமோக மாற்றத்தை தரும் என சனி பகவான் பிறக்கப்போகும் ஆண்டில் நெருக்கடியான நிலைமையை உண்டு பண்ணப் போகிறார் என ஜோதிடம் கூறுகிறது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு பயணம் செய்த சனி பகவான், ஜூன் 2027 வரை அதே ராசியில் பயணிப்பார். இதன் விளைவாக வரப்போகும் புத்தாண்டில் மோசமான பலன்கள் காத்திருக்கிறது.
அந்த வகையில், பிறக்கப்போகும் 2026-ல் சனி பகவான் பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள்
- மேஷ ராசியில் பிறந்தவர்கள் சனி பகவான் பெயர்ச்சியால் பிறக்கப்போகும் 2026 ஆம் ஆண்டில் லாபத்தை விட நஷ்டங்கள் அதிகமாக இருக்கும். உங்களை அறியாமல் உங்களுக்கு பல செலவுகள் இருக்கும். நீங்கள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும். உங்களுக்கு வருமானம் குறையவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு போராடிக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள்
- சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சனி பெயர்ச்சியால் செலவுகள் அதிகமாக பார்ப்பார்கள். சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கடினமான சூழ்நிலைகள் அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே இருக்கும். முயற்சிகளை மாத்திரம் கைவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற விடயங்களுக்கு முடிந்தளவு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க பாருங்கள்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களை மரியாதையாக நடத்துவது சிறந்தது. நிறைய நிதி சிக்கல்கள் வருவதால் முடிந்தளவு உஷாராக இருப்பது நல்லது. சிக்கலான வருடம் என்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
