கோபம் என்பது ஒவ்வொரு இருக்கும் உணர்ச்சியாகும். இதனை வெளிகாட்டும் விதம் நபருக்கு நபர் வேறுப்படும்.
ஜோதிட சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதனை மிகவும் ஆக்ரோஷமாக மற்றவர்களிடம் காட்டுவார்கள். இதனால் மன அழுத்தம், குடும்பத்தில் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் நடக்கலாம்.
இன்னும் சிலர் கோபம் வந்தவுடன் கத்துவார்கள், பொருட்களை உடைப்பார்கள் ஆனால் அதனை மனதில் வைத்துக் கொண்டிருக்க விரும்பமாட்டார்கள்.
வழக்கமாக எமது சூழலில் அமைதியாக இருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் அவர்களில் எல்லாம் அமைதியானவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களின் அமைதிக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
அமைதியாக இருக்கிறார்கள் என அவர்களிடம் பிரச்சினை செய்து மாட்டினால் அதுவே நமக்கு பெரும் பிரச்சினையாக மாறி விடும். கோபத்தில் அவர்கள் விடும் வார்த்தைகள் கூட நம்மை நொறுக்கி விடும்.
அந்த வகையில், அமைதியானவர்கள் போன்று இருந்து கோபத்தில் பூகம்பமாய் வெடிக்கும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. மிதுன ராசியில் பிறந்தவர்கள்
- புதனால் ஆளப்படும் இந்த ராசியினர் மற்றவர்களின் வார்த்தைகளுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கமாட்டார்கள். கோபம் கொள்ள வேண்டிய சந்தரப்பங்களில் வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்தும் நபராக இருப்பார்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் தாக்குதல்களில் கூட ஈடுபட வாய்ப்பு உள்ளது. கோபம் ஒரு உணர்வு என்பதை புரிந்து கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்காது. அதே போன்று கோபத்தினால் எதையும் சாதிக்க முடியாது என்பதை மிதுன ராசியில் பிறந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2. கும்ப ராசியில் பிறந்தவர்கள்
- கும்ப ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். யாரையும் ஏமாற்றமடைய வைக்கமாட்டார்கள். கொள்கைகளின் தாக்கம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். யாராவது இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்தால் அதிகமாக கோபம் கொள்வார்கள். நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை பற்றி பேசினால் கூட கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு கோபம் வரும். மன விளையாட்டுகளுக்கு பயம் கொள்ளும் நபர்களாக இருக்காதீர்கள். பயம் சில சமயங்களில் கோபத்தின் உச்சிக்கு உங்களை கொண்டு செல்லும். பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.
3. சிம்ம ராசியில் பிறந்தவர்கள்
- சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மரியாதையை விரும்பும் நபராக இருப்பார்கள். ஈகோவால் மற்றவர்களை அதிகமாக புண்படுத்துவார்கள். கோபம் உண்மையில் முட்டாள் கையில் எடுக்கும் ஆயுதம் போன்றது. இதனால் கத்துவது, மற்றவர்களை அசிங்கமாக பேசுவது உங்களை மற்றவர்களுக்கு வேறு விதமாக காட்டும். முற்றிலும் தவிர்க்க நினைக்கும் விடயங்களுக்கு இனியும் அவகாசம் கொடுக்காதீர்கள். மரியாதை வேண்டும் என நினைப்பவர்களாக இருந்தால், மற்றவர்களுக்கும் மரியாதை கொடுங்கள். இதுவே எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வாக இருக்கும். கோபம் கொள்ளும் பொழுது நீங்கள் பலவீனமாக காட்டப்படுவீர்கள்.
