ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரநிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எத்தனை தோல்விகளையும் தடங்கள்களையும் அனுபவித்தாலும், மீண்டும் முயற்சி செய்து வெற்றியை தனதாக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி பீனிக்ஸ் பறவை போல், எத்தனை முறை தோற்றாலும் தன்னை தானே தேற்றிக்கொண்டும் தனது இலக்கை அடையும் வரையில் போராடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிறப்பெடுத்தவர்கள் போர் கிரகமாக செவ்வாயால் ஆளப்படுவதால், அவர்கள் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கும் குணம் அற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்களுக்கு மற்ற ராசியினருடன் ஒப்பிடும் போது தைரியமும் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருக்கும்.
வாழ்வில் பல தோல்விகளுக்கு பின்னர் வெற்றியின் உச்சத்தில் சிம்மாசனம் போட்டு அமரும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அசைக்க முடியாத மன வலிமைக்கும், மீள்தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் நெருங்க கூட பயப்படும் விடயங்களை இவர்கள் சாதாரணமாக சாதித்துக்காட்டுவார்கள்.
இவர்களிள் மன வலிமையை எந்த தோல்வியும் பாதிக்வே முடியாதது. எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் ஒருபோதும் அவர்களின் திட்டங்களையும் இலக்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
தங்களைச் சுற்றி எவ்வளவு குழப்பம் நிலவினாலும், நிலைதடுமாறாமல் உறுதியாக நிற்கும் ஒரு அற்புதமான ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். இவர்கள் சூழ்நிலைக்கு பயந்து ஒரு விடத்தை செய்ய மாட்டார்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இணையற்ற விடாமுயற்சிக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்றவரை்களாக இருப்பார்களாம். இவர்கள் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டு போவது கிடையாது.
ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படும் இவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் நீதிக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவர்கள் சவால்களை நிதானமான மனப்பான்மையுடன் அணுகுவதால், தோல்வியை எப்படி கடக்க வேண்டும் என்தை புரிந்துக்கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் தடைகளை வெற்றிக்கான படிகளாய் மாற்றும் அசாத்திய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
