சுக்கிர பெயர்ச்சியானது 2025 ஆம் ஆண்டின் கடைசி பெயர்ச்சியாகும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது 2025 ஆம் ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் | Last Sukra Peyarchi Kavanama Iruka Vendiya Rasi

கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் நிறைய செலவுகளையும் சந்திக்க நேரிடும். அதோடு நிறைய மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் அலுவலக சூழல் சற்று அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்.

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் | Last Sukra Peyarchi Kavanama Iruka Vendiya Rasi

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபடக்கூடும். இதன் மூலம் குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க வெள்ளிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு பால், அரிசியை தானம் செய்யுங்கள்.

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் | Last Sukra Peyarchi Kavanama Iruka Vendiya Rasi

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சுக்கிரனுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் | Last Sukra Peyarchi Kavanama Iruka Vendiya Rasi

மீனம்

மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெற்றியைப் பெற நிறைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரம் இழப்பை ஏற்படுத்தும். கோபத்தைக் குறைக்க வேண்டும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பையே சந்திக்க நேரிடும். 

ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் | Last Sukra Peyarchi Kavanama Iruka Vendiya Rasi