பொதுவாகவே தொன்று தொட்டு முதலீட்டுக்கான சிறந்த வழிகளில் தங்கம் முக்கிய இடத்தை பெற்று வருகின்றது. தங்கத்தை சேமிக்க விரும்பாத மனிதர்கள் மிக அரிது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் காதல் உலகம் அறிந்தது தான். குறிப்பாக தமிழ் பெண்களை பொருத்தவரையில் சேமிப்பு என்றாலே அது தங்கம் வாங்குவதுதான் என்ற நினைப்பு அவர்கள் மத்தியில் இருக்கும்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜோதிட கணிப்பின் பிரகாரம் கிரக நிலைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிகமாக தங்கத்தை சேர்க்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அப்படி தங்கத்தை வாங்கி குவிக்கும் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

கிரக நிலவரப்படி மேஷ ராசியினர் இந்த ஆண்டில் எதிர்பாராத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியடைய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக ஜூன் மாதத்திற்குப் பின்னர் நிதி ஆதாயங்கள், வணிக வளர்ச்சி மற்றும் அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற லாபகரமான பலன்களை எதிர்ப்பார்களாம்.
இவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், பாதுகாப்பான சொத்தாகத் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு அமையும். அந்த ஆண்டு முடிவடையும் முன்னர் இவர்கள் பெருமளவில் தங்கத்தை கொள்வனவு செய்வார்கள்.
ரிஷபம்

ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும், ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும்.
இந்த ஆண்டில் பழைய முதலீடுகளிலிருந்து லாபம், கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது. எதிர்பாரத வகையில் பணவரவு செழிப்பாக இருக்கும்.
அதனால் 2026-ல் ரிஷப ராசிக்காரர்கள் தங்கம் வாங்குவதில் அதிக நாட்டம் காட்டுவார்கள். மேலும் தங்கம் இவர்களுக்கு பரிசாக வந்துசேரும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2026 இல் பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சி இருக்கப்போகின்றது.
சாதகமான கிரக நிலையால் இவர்களின் தொழில் வளர்ச்சி, வணிக லாபம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தங்கத்தை ஏதோ ஒரு வடிவில் சேமிப்பதற்கான வாய்ப்பு தானாக உருவாகும்.
இந்த காலகட்டத்தில் இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் புதிய விடயங்களை முயற்சிக்கும் தைரியம் உச்சத்தில் இருக்கும். நிச்சயம் இந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.
