உலகில் அனைத்து உயிர்களுக்கு உணவு என்பது இன்றியமையாதது. ஆனால் உணவை வகை வகையாக சமைத்து சாப்பிடுவது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.

பெரும்பாலும் அனைவருமே உழைப்பதன் முக்கிய நோக்கங்கள் பல இருந்தாலும் அதில் முதன்மை காரணம் உணவு தான்.விதவிதமாக உணவு சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம் தான்.

இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கியமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is Most Foodie

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழவேண்டும் என்பதற்காக சாப்பிடாமல், சாப்பிட வேண்டும் என்பதற்காகவே வாழும் அதீத உணவு பிரியர்களாக இருப்பார்களாம்.

அப்படி வாழ்வில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கியமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is Most Foodie

காதல், மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் எப்போதும் உலகத்து இன்பங்களை அனுபவிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் இயல்பாகவே அறுசுவை உணவுகளை சுவைப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும், உணவை ஒரு ஆறுதலாக பயன்படுத்தும் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

சுவை விஷயத்தில் ஒரு சிட்டிகை உப்பு கூட சமரசம் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் பெரும்பாலும் உணவு பிரியர்களாகவும் சற்று பருமனான தோற்றமும், வசீகரிக்கும் பார்வையையும் நிச்சயம் கொண்டிருப்பார்கள்.

கடகம்

இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கியமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is Most Foodie

கடக ராசிக்கும் சுக்கிரனே அதிபதியாக இருப்பதால், உலகத்து இன்பங்களால் அதிகம் ஈர்க்கப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பார்கள். உணவின் சுவையில் குறைபாடு இருப்பதை மட்டும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவே மாட்டார்கள்.

இந்த ராசியினர்  அனைவருக்கும் பெரும்பாலும் வயிற்றில் சிறிய அல்லது பெரிய மச்சம் இருக்கலாம், ஏனெனில் இவர்கள் மிகவும் உணவுப் பிரியர்களாக அறியப்படுகின்றார்கள்.

சிம்மம்

இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கியமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Is Most Foodie

கடக ராசிக்காரர்களைப் போலல்லாமல், சிம்ம ராசிக்காரர்கள் உணவை விரும்பும்போது அளவை விட தரத்தை அதிகம் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கு கொஞ்மாக சாப்பிட்டாலும் நல்ல சுவையில் விரும்பிய உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அவர்களின் குணம் பற்றி சரியாக சொன்னால் மேசையில் உள்ள அனைத்தையும் ருசிப்பார்கள், ஆனால் மொத்தமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். இவர்களுக்கு உணவின் மீது அதிக ஈடுபாடு நிச்சயம் இருக்கும்.