ஜோதிடத்தில் சனி பகவானின் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. இவர் பெயர்ச்சியடைந்தால் 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
இந்த நிலையில், வரும் மார்ச் 13ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகி, ஏப்ரல் மாதத்தில் அந்த ராசியில் உதயமாக உள்ளார். இந்த காரணத்தால் ஜோதிடத்தில் குறிப்பிட்ட மூன்று ராசிகள் வாழ்க்கையில் இன்பம் பெறுவதாக கூறப்படுகின்றது.
மீன ராசியில் சனி பகவான் உதயமாக இருப்பதால் இந்த ராசிகள் நிதி மற்றும் அவர்களுடைய கஷ்ட காலங்களில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ காத்து கொண்டு இருக்கின்றனர்.
எனவே ஜோதிடத்தில் குறிப்பிட்ட அந்த மூன்று ராசிகள் யார் எனவும் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் உண்டாகப்போகிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- சனி பகவான் மீன ராசியில் உதயமாவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
- சனியின் பார்வை ரிஷப ராசியின் லாப வீட்டில் விழுகிறது.
- இதனால் நிதி ரீதியான முன்னேற்றத்தை பெற இருக்கின்றனர்.
- நிதி நிலமையில் முன்னோக்கி செல்வார்கள்.
மிதுனம்
- சனி பகவானின் உதயம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
- இவரின் பார்வை மிதுன ராசியின் தொழில் ஸ்தானத்தில் விழுவதால், தொழில் சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் பெறுவார்கள்.
- கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும்.
- கல்வியில் போட்டி தேர்வவுகள் இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
- மீன ராசியில் சனி பகவான் உதயமாவது, மகர ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த காலத்தை வழங்க இருக்கிறது.
- இந்த காலகட்டத்தில் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும்.
- மேலும், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
