ஜோதிடத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்ககளின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுடைகள் உட்பட இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் நட்புக்கு அதிக முக்கியத்துவத் கொடுப்பார்களாம்.

உண்மையில் சொல்லப்போனால், நண்பன் அல்லது தோழிக்கு இன்னொரு தாயாக மாறும் ராயினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அன்பு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு நபர் மீது பாசம் வைத்துவிட்டார்கள் என்றால், அவர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் நண்பர்களை இன்னொாரு தாயாக இருந்து கவனித்துக்கொள்வார்கள்.
விசுவாசத்தின் மறு உருவமாக திகழும் இவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு கவசம் போல துணையாக நிற்பார்கள். இவர்களை நண்பராக பெறுவதே பேரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
கடகம்

ரிஷபத்தை போல் கடக ராசியினரும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்கள் குடும்ப உறுவுகளுக்கு கொடுக்கும் அதே மரியாதையையும், அக்கறையையும் நண்பர்களுக்கும் கொடுப்பார்கள்.
இவர்கள் இயல்பிலேயே மென்மையான இதயம் கொண்டவர்களாகவும், மற்றும் தங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரைப் போல நேசிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களின் நண்பர்களின் மகதில் இருக்கம் ஆசைகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் இவர்கள் நண்பரிகளின் விருப்பங்களை நிறைவேற்ற தங்களின் ஆசைகளை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பிறப்பிலேயே முழுமைத்தன்மைக்கும், நேர்தியான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அதே குணம் தான் நண்பர்களாகவும் இவர்களை பர்ப்பெக்ட்டானவர்களாக இருக்க செய்கின்றது.
அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு இன்னொரு தயாக இருந்து இவர்களை சரியாக பாதையில் வழிநடத்துகின்றார்கள். இவர்கள் நண்பராக கிடைத்துவிட்டால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.
இவர்கள் நண்பர்களின் தவறுகளை உடனடியாக கண்டிக்கவும் செய்யலாம், ஆனால் அவர்களின் கண்டிப்புக்குப் பின்னால் எப்போதும் உண்மையான அக்கறை மட்டுமே காரணமாக இருக்கும்.
