ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வெள்ளி நகை அணிந்தால் அவர்களுக்கு ஆபத்து வரும் எனப்படுகின்றது.
ஜோதிடத்தின்படி பல விடயங்கள் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு ராசி என்ன விடயங்களை செய்ய வேண்டும் என்ன விடயங்களை செய்ய கூடாது என்பதை எல்லாம் ஜோதிடம் மூலம் குறிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எப்படி தங்க நகை எந்த ராசிகள் அணிய கூடாது அணிய வேண்டும் என்று இருக்கிறதோ அதே போல வெள்ளி நகை குறிப்பிட்ட சில ராசிகள் அணியக்கூடாது எனப்படுகின்றது.
இதற்கு காரணம் வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது. அமைதியை விரும்புபவர்கள் இந்த வெள்ளி நகைகளை அணிந்தால் நல்லது. வெள்ளி சந்திரனின் தாக்கத்தை வலுப்படுத்த கூடியது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் வெள்ளி நகை அணியக்கூடாது என ஜோதிடத்தில் கூறுகின்றனர்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்கள் தங்கள் செவ்வாய் கிரகத்தின் ஆளுமை கொண்டவர்கள்.
- ஜோதிடத்தில் செவ்வாய் நெருப்பு தத்துவத்தை கொண்டது எனப்படுகின்றது.
- அதே நேரம் வெள்ளிக்கு சொந்தமான சந்திரன் குளிர்ச்சிக்கு அதிபதியாக பார்க்கப்படுகின்றார்.
- இதனால் ஜோதிடத்தில் கூறப்படுகின்றது இவை இரண்டும் எதிரெதிர் இல்லை என்றாலும் மேஷ ராசிக்காரர்கள் வெள்ளி நகை அணிந்தால் அவர்களின் தன்னம்பிக்கையை அவர்கள் அழப்பார்கள் எனப்படுகின்றது.
சிம்மம்
- சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார்.
- சந்திரன் மற்றும் சூரியன் இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும் .
- இவர்கள் இருவரும் சேர்ந்து எதிர்மறை ஆளுமையை பிரதிபலிக்கின்றது.
- எனவே தான் சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளி நகை அணிந்தால் அவர்கள் வாழ்க்கையில் சோம்பேறியாக இருப்பார்கள் எனப்படுகின்றது.
தனுசு
- தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் எனப்படுகின்றது.
- இந்த ராசிகளுக்கு குரு பகவான் அதிபதி என்பதால் தனுசு ராசிக்காரர்கள் வெள்ளி நகை அணியும் போது அவர்களின் ஜாதகத்தில் அவர்களுக்கு நடக்க இருக்கும் நல்ல காரியங்கள் தடைபட்டு போகலாம் எனப்படுகின்றது.
- நிதி நெருக்கடிகள் அல்லது முடிவுகளில் தடுமாற்றத்தை இந்த வெள்ளி நகை அணிவதால் ஏற்படும் எனப்படுகின்றது.
