பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை தினம் என்பதால், பலரும் நாவுக்கு ருசியான சமைத்து சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். 

அந்தவகையில் இந்த சன்டே ஸ்பெஷலாக வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில்  மட்டன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க | Tasty Simple Mutton Curry Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வறுத்து பொடி செய்வதற்கு

பாதாம் - 10 

முந்திரி - 10

ஜாவித்திரி - 1 

கசூரி மெத்தி - 1 தே.கரண்டி 

மல்லி - 2 தே.கரண்டி 

சீரகம் - 1/2 தே.கரண்டி

மிளகு - 1/2 தே.கரண்டி

காஷ்மீரி வரமிளகாய் - 3

குழம்பிற்கு தேவையானவை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி 

 கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

தயிர் - 3 மேசைக்கரண்டி 

மட்டன் - 750 கிராம் 

உப்பு - சுவைக்கேற்ப 

தண்ணீர் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க | Tasty Simple Mutton Curry Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாதாம், முந்திரி, ஜாவித்திரி, கசூரி மெத்தி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் காஷ்மீரி வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரையில் வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்றாக பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க | Tasty Simple Mutton Curry Recipe In Tamil

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து  பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதில் மஞ்சள் தூள், அரைத்த பொடி, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் குழம்பு.... ஒரு முறை இந்த பக்குவத்துல செய்ங்க | Tasty Simple Mutton Curry Recipe In Tamil

பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு,  அதனுடன் கழுவி வைத்துள்ள மட்டனையும் போட்டு,  சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கலந்துவிட்டு வேகவிட வேண்டும். 

பின்பு அதில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை  ஊற்றி கிளறிவிட்டு, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கி வைக்க வேண்டும். 

ஆறியதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லி தூவி கிளறினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.