2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடந்தது,  இதனால் பாதிப்புக்குள்ளாகும் ராசிகள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய இடத்தில் இருக்கிறார். எல்லா கிரகங்களிலும் மிக மெதுவாக தன்னுடைய பயணத்தை நகர்த்தி செல்பவர் சனி பகவான் தான்.

இவர் நீதியின் கடவுளாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றர். இதனால் இவர் கர்ம காரகன் என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 6 அதிகாலை 8:31 மணியளவில் இடப்பெயர்ச்சி இடம்பெற்றது.

சனியின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு துன்பத்தை கொடுக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்ப்பதோடு அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

மார்ச் 6 இன் பின்னர் சனியால் வரும் கண்டம் இந்த ராசிகள் கவனம் - பரிகாரம் என்ன? | Sani Peyarchi 2026 March 6 Difficult Time Zodiac

மீனம்

  • மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் பெயர்ச்சியடைகிறார். இதனால் உங்களுக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. 
  • இந்த காலத்தில் உடல் நலம் பாதிக்கப்படும் அதில் கவனம் தேவை. 
  • தேவையற்ற அலைச்சல்கள், மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம், வேலைப் பளு போன்றவை அதிகரிக்கலாம்.
  • குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் வெடிக்கும். 
  • பேசும் போது பேச்சில் நிதானம் வேண்டும். 

மேஷம்

  • மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது.
  • பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். 
  • இன்னுமொருவரிடம் பணம் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 
  • நிதி இழப்புகள், பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்.
  • உங்களுக்கு இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகமாகும். 
  • வேலையில் தடை, எடுக்கும் காரியங்களில் பின்னடைவு, முயற்சிகளில் தோல்வி வரும். 

கும்பம்

  • கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி தொடங்குகிறது.
  • உங்களுக்கு கால்களில் நோய் அல்லது அடி விழும். 
  • குடும்பத்தில் சிறிய பிரச்சனை கூட பெரிதாகலாம். 
  • இந்த காலகட்டத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் சனி பகவானின் முழுமையான ஆசி முழுமையாக கிடைக்கும். 
  • ஆரோக்கியததில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். 

சிம்மம்

  • சிம்ம ராசிக்கு தற்போது அஷ்டம சனியின் காலம் தொடங்குகிறது.
  • எந்த விடயத்திலும் தடைகள் தாமதங்கள் வரும். 
  • வாகனப்பயணங்களின் போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
  • தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். 
  • எனது இந்த காலகட்டத்தில் பொறுமையும், நிதானமும் அவசியம்.
  • முடிந்தவரை நிதானத்துடன் செயற்படுங்கள். 

மார்ச் 6 இன் பின்னர் சனியால் வரும் கண்டம் இந்த ராசிகள் கவனம் - பரிகாரம் என்ன? | Sani Peyarchi 2026 March 6 Difficult Time Zodiac

சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

சனிபபெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு வரும் சனி பகவானின் தாக்கத்தை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சில பரிகாரங்களை செய்யலாம்.

1. சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

2.மாற்றுத்திறனாளிகள் அல்லது

3.ஏழைகளுக்கு தயிர் சாதம் வழங்கலாம்.

4.ஏழை மாணவர்களின் கல்விக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். இத்தனையும் செய்து அனுமன் அல்லது பிள்ளையார் வழிபாடு செய்தால் சனியின் தாக்கம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.