தங்க நகைகளை எந்த விரலில் அணியலாம்? எவ்வாறு அணியக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தங்க நகைகளை அணிவதற்கு அனைவருக்கும் விருப்பம் இருக்கும். ஜோதிடத்தின்படி தங்க நகை என்பது குரு பகவானின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்டதாக இருந்தாலும், எந்த விரலில் நாம் அதனை அணிகின்றோம் என்பதைப் பொறுத்தே உங்களது வாழ்க்கை முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் அமையுமாம்.

அந்த வகையில் நாம் எந்த விரல்களில் தங்கத்தை அணியலாம்? எந்த விரலில் அணியக்கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Goldசுண்டு விரல் என்பது புதனுக்குரிய இடமாக இருப்பதால், அந்த விரலில் தங்கத்தினை அணியக்கூடாது. ஏனெனில் தங்கம் குருவிற்குரியது. குருவிற்கும் புதனுக்கும் இடையில் ஒருவிதமான பகைமை அல்லது சமநிலை இல்லாத நிலை ஏற்படும்.

ஆதலால் சுண்டு விரலில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் புத்திசாலித்தனம் மற்றும் தொழில் ரீதியான முடிவுகளில் குழப்பம் ஏற்படுகின்றது. 

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Goldநடுவிரலில் மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நடுவிரல் சனிபகவானால் ஆளப்படுகின்றது. இதனால் இந்த விரலில் அணிவதால் தாமதம் ஏற்படலாம். செய்யும் காரியத்தில் பின்னடைவு ஏற்படும். குறைந்த முன்னேற்றத்தினையே காண முடியுமாம்.

ஆகவே ஜோதிடத்தின் படி சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட நடுவிரலில் தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஜாதகத்தில் சனி வலுவாக இருக்கும் நபர்கள் இந்த விரலில் அணிந்து கொள்ளலாம்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Goldமோதிர விரல் சூரியக்குரியது ஆகும். மேலும் சூரியனும், குருவும் நட்பு கிரகங்களாக இருக்கின்றனர். ஆதலால் மோதிர விரலில் தங்கம் அணிவது, புகழ், கௌரவம் மற்றும் ஆளுமை திறனை அதிகரிக்கின்றது.

திருமணம் ஆனவர்கள் இந்த விரலில் தங்கம் அணிந்து வந்தால் குடும்ப உறவை பலப்படுத்துவதுடன், ஆள்காட்டி விரல் குரு பகவானுக்குரியது என்பதால் குருவின் உலோகமான தங்கத்தின் அந்த விரலில் அணிவதும் நன்மையை அளிக்கின்றது.

ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது ஒருவருக்கு தலைமைப்பண்பு, ஆன்மீக அறிவு மற்றும் கல்வியில் முன்னேற்றத்தினையும் அளிக்குமாம்.

மறந்தும் கூட இந்த விரலில் மோதிரம் அணியாதீங்க... சனியின் கோபத்திற்கு ஆளாகிடுவீங்க | Astrology Says Which Finger To Wear Gold

தங்கம் மகாலட்சுமி அம்சமாக பார்க்கப்படுவதால், இடுப்பிற்கு கீழே தங்கம் அணிவதை தவிர்க்கவும். அதாவது மெட்டி, கொலுசு இவற்றினை தங்கத்தில் அணியக்கூடாது.

அதே போன்று வலது கையில் தங்கம் அணிவது நன்மை அளிக்கும் என்றும் இடது கையில் அணிவது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. 

அதே போன்று தங்கத்தினை அழுக்கு படிந்து வைத்திருக்காமல், சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.