ஜோதிடத்தில் சனி பகவானுடன் செவ்வாய் இணையும் நிலையில், இத்தருணத்தில் எந்தெந்த ராசிகளுக்கு நன்றாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி செவ்வாய் சேர்க்கை
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் மற்றும் சேர்க்கை இவை முக்கியமாக பார்க்கப்படுகின்றது. நியாயம் தீர்க்கும் கிரகமாக சனி பார்க்கப்படும் நிலையில், நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பார்க்கப்படுகின்றது.
இந்த இரண்டு கிரகங்களும் ஏப்ரல் 2ம் தேதி இணைகின்றது. செவ்வாய் மீன ராசியில் பிரவேசிப்பார். அதே நேரத்தில் சனியுடன் சேர்க்கை ஏற்படுகின்றது.
கிரகங்களின் நிகழ்வுகள் பல மாற்றங்களையும், சில பாதிப்பினையும் ஏற்படுத்தும் நிலையில், இந்த சேர்க்கையினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரை தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ஏப்ரல் மாதத்தில் இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது ரிஷப ராசியினருக்கு சுப பலனை அளிப்பதுடன், பல வழிகளில் பயன்கள் வந்து சேரும். நிதி நிலை மேம்படுவதுடன், சொத்துக்களையும் பெற வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கு ஏற்ப பலனை பெறுவதுடன், பணம் சம்பாதிக்க பல வழிகளும் கிடைக்கும்.

மிதுனம்
இரண்டு கிரகங்களின் சேர்க்கையினால் மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், வெற்றியையும், புகழையும் அடைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக அதிக நன்மை கிடைப்பதுடன், பல நன்மைகளும் அடுத்தடுத்து நிகழும்.
துலாம்
இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது துலாம் ராசியில் ஆறாம் வீட்டில் அமையும் நிலையில், ஆரோக்கியம் மேம்படுகின்றது. கடன் சுவை தீர்வதுடன், எதிரிகளை வெல்லவும் இக்காலக்கட்டம் சிறந்ததாக இருக்கின்றது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களின் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
