நாம் ஆழ்ந்து உறங்கும் போது நமது கனவில் கர்ப்பிணி பெண்களை கண்டால் அதற்கு என்ன பலன் என்பதை பதவில் விரிவாக பார்க்கலாம்.

ஆழ்ந்த உறக்கத்தில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? | Pregnant Women In A Dream

கனவு 

நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு.

நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும். அந்த வகையில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பதவில் பார்க்கலாம். 

ஆழ்ந்த உறக்கத்தில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? | Pregnant Women In A Dream

 

பலன்கள் என்ன?

நீங்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் கனவில் நிறைமாத கர்ப்பிணியை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் புதிய நபர்களை சந்திக்க போகீறீர்கள் என அர்த்தமாம். அத்துடன் இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் முடியும். 

நிறைமாத கர்ப்பிணியை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் வெகு விரைவில் கிடைக்கப்போகிறது என்றும் அர்த்தமாம். 

பல நாட்களாக வீட்டில் மற்றுமு் குடும்பத்திற்குள் இருந்த பிரச்சனைகள் வெகு விரைவில் மறையும். இதனால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மகிழ்ச்சி பெருகும். 

ஆழ்ந்த உறக்கத்தில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? | Pregnant Women In A Dream

 

மேலும் கனவில் இரண்டு கர்ப்பிணிகள் வந்தால் கனவு காண்பது பெண்ணாக இருந்தால் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். ஆணாக இருந்தால் அவருடைய வம்சம் விருத்தி அடையும் எனப்படுகின்றது. 

ஒரு கர்ப்பிணி பெண் அதிக பிரவ வலியால் துடித்து கத்துவது போல கனவு கண்டால் உங்களுக்கு பிரச்சனைகள் வரப்போகின்றது என்று அர்த்தமாம். 

நீங்கள் பெண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமடைவீர்கள் என்று கூறப்படுகின்றது.

ஒருவருக்கு பெண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகின்றது என்று அர்த்தம்.