முடி வளர்ச்சிக்கு உதவியாகவும், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தலைமுடி

இன்றைய காலத்த்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரச்சனையாக இருப்பது தலைமுடி ஆகும்.

இளம்வயதில் தலைமுடி நரைத்தல், உதிர்தல் பிரச்சனைகளால் தவிக்கும் இளைஞர்கள் கட்டாயமாக உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

அந்த வகையில் தலைமுடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளலாம்.

அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க | These Food Help In Hair Growth

முடி ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்

இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பாலக்கீரையில் முடி வேர்களுக்கு சிறந்ததாகவும், முடிவை வலுவாகவும் வைக்கின்றது.

புரோட்டீன் மற்றும் பயோட்டீன் சத்துக்கள் நிறைந்த முட்டை முடி வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கின்றது. முடியை வலுவாக்கி, முடி உடைவதைக் குறைக்கவும் செய்கின்றது.

அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க | These Food Help In Hair Growth

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்ட சால்மன் மீன் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகின்றது.

உலர் பழங்களாக இருக்கும் வால்நட், ஆளி விதைகள், பாதாம் இவைகள் முடியை வலுவாக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் செய்கின்றது.

புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பருப்பு வகைகளும் முடிக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது. முடி செல்கள் வளர்வதற்கு உதவுவதுடன், வேர்களையும் வலுவாக்குகின்றது.

அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க | These Food Help In Hair Growth

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு தலைமுடி வறட்சியினைத் தடுக்கின்றது.

புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி5 சத்துக்கள் நிறைந்த கிரேக்க யோகர்ட் முடி வளர்ச்சியினை ஆதரிப்பதுடன், ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.

அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க | These Food Help In Hair Growth