இந்த கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள மாங்காய் பச்சடி மிகச்சிறந்த தேர்வாகும்.

 

 மாங்காய் பச்சடி

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இப்போது மாம்பழ சீசன் என்பதால் மாங்காய் வைத்து ஒரு பச்சடி செய்து சாப்பிடலாம்.

இதற்கு மாங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய பொருட்கள் தேவை. 

இது சுவையானது, சத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் தான். எப்போதும் மாங்காயை வைத்து ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல் இதுபோல பச்சடி செய்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

உடலை குளிர்ச்சியாக்கும் மாங்காய் பச்சடி - இப்படி ஒரு தடவ பச்சடி செய்து பாருங்க | Mango Pachadi Recipe Healthy Food

தேவையான பொருட்கள்

  • 3 பச்சை மிளகாய்கள்,
  • 2 கப் புதிய கொத்தமல்லி,
  • 1 கப் புதினா இலைகள்,
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி,
  • தேவையான அளவு உப்பு
  • ½ தேக்கரண்டி கருப்பு உப்பு
  • ½ தேக்கரண்டி மிளகுத்தூள்,
  • 2 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்
  • ½ கப் குளிர்ந்த நீர் 

செய்முறை

பச்சடி சயெ்ய முதலில், அடுப்பில் மாங்காய் மற்றும் பச்சை மிளகாயை லேசாக சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.மாங்காயை லேசாக சுட்டு உடுக்கவும். 

பின்னர் மாங்காயின் தோலை உரித்து மாங்காய் மற்றும் வறுத்த மிளகாயை மிக்சியில் போடவும். பின்னர் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, உப்பு, மிளகுத்தூள் மற்றும் வறுத்த சீரகம் சேர்க்கவும்.

உடலை குளிர்ச்சியாக்கும் மாங்காய் பச்சடி - இப்படி ஒரு தடவ பச்சடி செய்து பாருங்க | Mango Pachadi Recipe Healthy Food

 

பின்னர் குளிர்ந்த நீரைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைக்கவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப சுவையையும் பதத்தையும் சரிசெய்து, சாதம், ரொட்டி அல்லது எதனுடனும் சேர்த்து சாப்பிடலாம்.