தாய்லாந்திலுள்ள ஒரு கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் நீந்தினாலோ குளித்தாலோ அவர்களுக்கு சுமார் 90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

தாய்லாந்திலுள்ள Maya Bay என்னும் கடற்கரையில்தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அதற்குக் காரணம் என்னவென்றால், சுற்றுலாப்பயணிகள் கடலில் நீந்துவதல் மற்றும் படகில் பயணிப்பதால், அப்பகுதியிலுள்ள பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. 

ஆகவே, அப்பகுதியில் கடலில் குளிப்பது, நீந்துவது முதலான விடயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு 10,000 baht (தாய்லாந்து நாணயம்) அபராதம் விதிக்கப்படும். 10,000 baht என்பது இலங்கை மதிப்பில் 98,567.21 ரூபாய் ஆகும்.