டிஎன்ஏ பரிசோதனை முடிவில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு தந்தை என்பது நிரூபனமாகியுள்ள நிலையில், அவரது முதல் மனைவி பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருப்பினும் அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு குழந்தைக்கு நியாயம் வேண்டும் என தற்போது வரையில் போராடி வந்தார்.
இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கினார். அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.

இந்நிலையில், தன் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிந்த பின்னரும் குடும்பத்துடன் வைகுண்டம் கோவிலுக்கு சென்று ரங்கராஜின் முதல் மனைவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
