அடிக்கடி காபி குடித்தால் உடலில் குறிப்பிட்ட சில நோய்கள் வருவதை தடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
காபி
தினசரி காலையில் புத்துணர்ச்சிக்காக காபி குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இதன் நறுமணத்திற்கே சிலர் இதை விரும்பி குடிப்பார்கள்.
உங்கள் உணவுத் திட்டத்தில் காபியைச் சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக்கொள்வது உங்கள் முழு உடல்நலப் பலனையும் அள்ளி கொடுக்கும். மேலும், காபியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சில கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.
அந்த வகையில் காபி குடிப்பதால் கிடைக்கும் சில அற்புதமான உடல்நலப் பலன்களைப் பற்றி பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

என்ன நோய்க்கு மருந்து?
இதயத்திற்கு நன்மை பயக்கும்
- காபி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். காபி குடிப்பது கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். பார்கின்சன் நோய் Parkinson's மற்றும் அல்சைமர் Alzheimer நோயின் அபாயத்தைக் குறைக்கவும் காபி குடிப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உறுதியாக தெரிய வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
- சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காபி உங்கள் உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலத்திலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் காபி மிகவும் துணையாக அமையும். மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உணவுத் திட்டத்தில் காபியைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கல்லீரல்
- கல்லீரலை வலுவாகப் பராமரிக்க காபி குடிப்பது நல்லது. காபி குடிப்பதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையக்கூடும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காபியை உட்கொள்வது, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். உடல் பருமனை குறைக்கவும் காபி குடிக்கலாம். இவ்வளவு நன்மைகள் நிறைந்த காபியை நீங்கள் உணவு திட்டத்தில் சேர்க்க முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
