2026 ஆம் ஆண்டில் கிரகங்கள் தங்கள் ராசிகளை தொடர்ந்து மாற்ற உள்ள நிலையில், முக்கியமான கிரகமான குரு பகவானும் தனது ராசி மாற்றத்தை மேற்கொள்ள உள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் சூரிய பகவானின் சொந்த வீடான சிம்ம ராசிக்குள் நுழைய இருப்பது ஜோதிடர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த குரு பெயர்ச்சி, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிகமான நன்மைகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை அனுபவிக்க உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றள. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

சிம்ம ராசி குருபெயர்ச்சி - 2026 முதல் 3 ராசிகளுக்கு பணமழை தான் | Guru Peyarchi 2026 Which Zodiac Luck Money

 துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை கொண்டு வரும். குரு பகவான் உங்கள் ராசியின் 11-வது வீடான வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். 

எனவே இந்த காலகட்டத்தில் உங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.

சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்கள் தலைமைத்துவ குணங்களால் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

ரிஷபம்

2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். குரு உங்கள் ராசியின் நான்காவது வீடு வழியாக சஞ்சப்பார். 

நான்காவது வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன், பொருள், வசதிகளை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீடான அதிர்ஷ்ட ஸ்தானத்தின் வழியாக பயணிப்பார்.

எனவே இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் நன்றாக படிப்பீர்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.