விவாகரத்திற்கு பின்னர் நடிகை ஹன்சிகா முதன் முறையாக அதை பற்றி பேசி உள்ளார்.

 

நடிகை ஹன்சிகா

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா. இதன் பின்னர் பல காதல் திரைப்படங்களை முன்னணி கதாநாயர்கர்களுடன் நடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

தற்போது நடிகை ஹன்சிகாவை சினிமாவில் பார்ப்தே ஒரு அரிதாக உள்ளது.  இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சோஹைல் இதற்கு முன்னர் ஹன்சிகாவின் தோழியான ரிங்கியை திருமணம் செய்திருந்தார். இவர்களின் விவாகரத்துக்கு பின்புதான் அவர் ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய ஹன்சிகா - அதுவும் சரி தானே! | Actress Hansika Speaks About Divorce What Happend

 

ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா சினிமாவில் நடித்து வந்தார்.

 

ஆனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணமாகி நான்கு ஆண்டுகளில் பிரிந்து விட்டனர்.

இருவருக்கும் மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஹன்சிகா கணவரிடம் இருந்து ஜீவனாம்சத்தையும் வேண்டாம் என மறுத்துவிட்டார். 

இந்த நிலையில் ஹன்சிகா, பல நாட்களுக்கு பின்னர் தனது விவாகரத்து பற்றி ஒரு பாட்காஸ்ட் பேட்டியில் பேசி உள்ளார். 

விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய ஹன்சிகா - அதுவும் சரி தானே! | Actress Hansika Speaks About Divorce What Happend

 

அதில், தன்னுடைய கடினமான காலங்களில் குடும்பத்தினர் தன்னுடன் ஆதரவாக இருந்துள்ளார் என கூறி உள்ளார். என்ன பிரச்சனை என்பது தனக்கும் சோஹைலுக்கும் மட்டுமே தெரியும் எனவும் கூறி இருந்தார். 

பின்னர் தவறான ரயிலில் ஏறிவிட்டால் சேருமிடத்தை அடையும் வரை காத்திருப்பதை விட, பாதியில் இறங்கி விடுவது புத்திசாலித்தனம் என்று கூறியிருந்தார். மேலும் இந்த முடிவால் வருத்தமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது ச5க வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.