கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரி பருப்பபை சாப்பிடலாமா என்று இந்த பதிவில் காணலாம்.

முந்திரி:

சத்தான கொட்டை வகைகளில் ஒன்றான முந்திரி பருப்பை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

முந்திரி பருப்பில் என்னற்ற வைட்டமின்கள் காணப்படுவதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

அதிக கலோரிகள் நிறைந்துள்ள முந்திரி பருப்பில் உள்ள நிறைவுறாக் பொழுப்புக்கள் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை அளிக்கிறது.

ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரி பருப்பை எடுத்து கொள்ளக்கூடாது என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் இந்த உண்மைத்தன்மையை விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.  

 

கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

முந்திரியின் கலோரிகள் அதிகமாக காணப்பட்டாலும், இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கின்றது. உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரியை குறைந்த அளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதாவது சரியான முறையில் உட்கொண்டால் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பினை முந்திரி பருப்பு குறைக்கின்றது. மேலும் நல்ல கொழுப்பான எச்டிஎல் கொழுப்பினை அதிகரிக்கவும் செய்கின்றது.

தினமும் 20 முதல் 25 கிராம் முந்திரி எடுத்துக் கொண்டால் 5 முதல் 10 சதவீதம் வரை கொழுப்பு குறைவதாக ஆய்வில் காணப்படுகின்றது.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கவங்க முந்திரி சாப்பிடக்கூடாதா..? மருத்துவர் பதில்..! | Can Cholesterol People Eat Cashewnut Or Avoid It

நன்மைகள் என்னென்ன?

நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த முந்திரி பருப்பில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் இவை உடலில் ஏற்படும் அழற்சியினை குறைக்கின்றது.

இரத்த கொலஸ்ட்ரால் அளவு மேம்படுவதுடன், இதில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் தாமிரம், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், ஆக்சிஜனேற்றத்தையும் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படுகின்றது.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கவங்க முந்திரி சாப்பிடக்கூடாதா..? மருத்துவர் பதில்..! | Can Cholesterol People Eat Cashewnut Or Avoid It

எவ்வளவு சாப்பிடலாம்?

உப்பு சேர்க்காத முந்திரியை சாப்பிடுவது சிறந்தது. தினமும் 10 முதல் 15 முந்திரிகளை சாப்பிடலாம் என மருத்துவகள் கூறுகின்றனர்.

ஆனால் எண்ணெய்யில் வறுத்த முந்திரியை எடுத்துக் கொள்வது, சோடியம் மற்றும் கலோரி அளவை அதிகரிக்கச் செய்யும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கவங்க முந்திரி சாப்பிடக்கூடாதா..? மருத்துவர் பதில்..! | Can Cholesterol People Eat Cashewnut Or Avoid It

அதிகப்படியான முந்திரியை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதுடன், சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும்.

முந்திரியின் தரத்தினை கண்டிப்பாக சோதித்து பார்த்து வாங்க வேண்டும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பே சாப்பிடவும்.