ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருகின்றது
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவனின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்களாம்.
அப்படி கணவனுக்கு ராஜ யோகத்தை கொடுக்கும் பெண் நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அன்பு மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் புகுந்த வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார்கள். அவர்கள் புகுந்த வீட்டுக்குள் சென்றதும் வீட்டில் இருந்த துன்பங்கள் நீங்கும்.
திருமணத்தின் மீதும் கணவனின் மீதும் இவர்களுக்கு அதீத பற்று காணப்படும். கணவருக்கு அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கூர்மையான அறிவை கொண்டிருப்பார்கள். இவர்களால் குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிக்கும்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவை இருக்கும் இடத்தில் நிச்சயம் மகா லட்சுமி இருப்பார்.
காதலுக்காக எதையும் செய்யக்கூடிய குணத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் புகுந்த வீட்டை அன்பாலும், மகிழ்ச்சியாலும் நிரப்புவார்கள்.
இந்த நட்சத்திர பெண்களால் அவர்கள் கணவரின் நிதி நிலையில் பாரிய வளர்ச்சி ஏற்படும். இவர்கள் கணவனுக்கு ராஜயோகத்தை நிச்சயம் கொடுப்பார்கள்.
ஆயில்யம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் புத்திக்கூர்மையாலும், ஒத்துழைப்பாலும் கணவரின் குடும்பத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள்.
இவர்களுக்கு இயற்கையாகவே பணம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் கணவனுக்கு அதிர்ஷ்ட தேவைதையாக இருப்பார்கள்.