நீரிழிவு நோயாளிகள் எந்தெந்தப் பழங்களை உட்கொள்ளலாம், எவற்றை உட்கொள்ளக் கூடாது என்பதை பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடுவதில் ஏற்படும் மிகச் சிறிய கவனக்குறைவு கூட இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
பழங்கள் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

பழங்கள் உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை போன்றவற்றை தரும். எனவே அவற்றை சரியான அளவிலும் சரியான தேர்விலும் சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தப் பழங்கள் நன்மை தரும். எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களைச் சாப்பிடலாம்?
ஆப்பிள், பேரிக்காய், பிளாக்பெர்ரி, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பழங்கள்
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, அன்னாசிப்பழம், சப்போட்டா மற்றும் லிச்சி போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும். காரணம் இந்தப் பழங்களில் இயற்கையான சர்க்கரையும், அதிக கிளைசெமிக் குறியீடும் உள்ளன.
இவை இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கக்கூடும்.
இந்தப் பழங்களுடன், பாகு கலந்த பதப்படுத்தப்பட்ட பழங்கள், அதிக இனிப்புள்ள பழச்சாறுகள், திராட்சை மற்றும் பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட பழ ஸ்மூத்திகள் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.

நீரிழிவு நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதற்கான சரியான முறை
பழங்களை எப்போதும் முழுமையாக சாப்பிடுங்கள், சாறாக பிழிந்து சாப்பிட கூடாது. ஒரே நேரத்தில் அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
காலையில் அல்லது சிற்றுண்டி நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது.
பழம் சாப்பிட்ட பின்னர் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் சரிபார்ப்பது அவசியம்.
ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமாக செயல்படும், எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகள், சர்க்கரை அளவு மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
