விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது அரசியல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே ஒரு வருத்தம் தான். கேரளாவில் இருக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டில் வாக்கு இல்லை என்பது தான் வருத்தம் என பிரபல நடிகை விஜய் குறித்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜயின் அரசியல் வருகையானது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டியிருக்கின்றது. சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்பரல் 23 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், மே 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்டவுள்ளது.

விஜய் தேர்தலில் நிச்சயம் ஜெயிக்கணும்! பிரபல நடிகை ஓபன் டாக் | Vijay Must Win Actress Aishwarya Lekshmi Wishes

 

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி 

இந்நிலையில் நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நெல்லையில் அளித்த பேட்டியில், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.என்னுடைய வாழ்த்து, பிரார்த்தனை எல்லாமே அவருக்கு உண்டு.

விஜய் தேர்தலில் நிச்சயம் ஜெயிக்கணும்! பிரபல நடிகை ஓபன் டாக் | Vijay Must Win Actress Aishwarya Lekshmi Wishes

நான் அரசியல் குறித்து பேச வேண்டாம் என சொல்வேன்.ஆனால், விஜய் மேடையில் பேசும் வார்த்தைகளை கேட்கிறேன். அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. ஆனால், மக்களுக்காக களத்துக்கு வருகிறார்.

 

மக்கள் மீது அவருக்கு அன்பு இருக்கிறது. தனக்கு மக்கள் கொடுத்த அளப்பரிய அன்பை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் அவர் அரசியலுக்கு வருகிறார். அவரது அந்த நோக்கத்தை நான் பாராட்டுகிறேன்.

விஜய் தேர்தலில் நிச்சயம் ஜெயிக்கணும்! பிரபல நடிகை ஓபன் டாக் | Vijay Must Win Actress Aishwarya Lekshmi Wishes

 

பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. விஜய் தேர்தலில் வெல்ல வேண்டும். மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது என்பதை மீடியாவில் பார்க்கும்போது தெரிகிறது.

ஒரே ஒரு வருத்தம் தான். கேரளாவில் இருக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டில் வாக்கு இல்லை என்பது தான் வருத்தம். இந்த முறை தமிழ்நாட்டில் வாக்கு இருந்திருக்கலாமே என தோன்றியது” என்று தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.