தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மரணம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜீவா படத்தின் நிகழ்ச்சியில் கடைசியாக கலந்து கொண்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம்வந்த ஆர்.பி.சவுத்ரி இன்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது திரையுலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரைக் குறித்த பல நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், இவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை தற்போது நினைவுகூர்கின்றனர்.

அதாவது மகன் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது தனது பேரனை கை அசைத்து மேடைக்கு அழைத்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் ஜீவாவின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உறுதுணையாகவும், நண்பராகவும் செயல்பட்டுள்ளார்.
மேலும் ஜீவாவிற்கும் அவரது தந்தைக்கும் 35 வயது வித்தியாசம் என்றும் தான் எந்தவொரு மனக்ஷ்டத்தில் இருந்தாலும் உடனே அதனை போக்கிவிடுவார் என்று ஜீவா கூறியிருந்தார்.

நிறைவேறாத ஆசை
விஜய்யின் பூவே உனக்காக படம் மட்டுமின்றி அவரது பல வெற்றிபடங்களை கொடுத்த சவுத்ரியின் கடைசி ஆசையாக விஜய்யை தனது 100வது படத்தில் நடிக்க ஆசை இருந்ததாம்.
ஆனால் விஜய் அரசியலில் இறங்கிய நிலையில், தனது ஆசை நிறைவேறாமல் சென்றுள்ளது.

விஜய்யின் தவெக வெற்றிக்கொண்டாட்டம் இன்னும் முடியாத நிலையில், அவரது ஆரம்ப கட்டத்திற்கு அச்சாணியாக இருந்த தயாரிப்பாளரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய் ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
