3 ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது என ஜோதிடசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

மறந்தும் கூட வெள்ளி மோதிரத்தை இந்த ராசிகள் அணிய கூடாது! ஏன் தெரியுமா? | 3 Zodiac Signs Should Not Wear Silver Rings

வெள்ளி மோதிரம்

ஜோதிட சாஸ்திரத்திங்களின்படி கிரகங்கள் அடிப்படையில் ராசிப்பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலோகமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என ஜோதிடத்தில் கூறப்பட்டது.

 

அந்த வகையில், வெள்ளி (Silver) சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்ற உலோகமாகம் எனப்படுகின்றது. 

மறந்தும் கூட வெள்ளி மோதிரத்தை இந்த ராசிகள் அணிய கூடாது! ஏன் தெரியுமா? | 3 Zodiac Signs Should Not Wear Silver Rings

 

ஜோதிடத்தில் தங்க மோதிரத்தை சில அணியலாம் சிலர் அணியக்கூடாது என்பது நியதி உள்ளது. இதற்கான காரணம் நவக்கிரக பலன்களை நாம் அனுபவிக்க நேரிடுவதால் தான். 

அந்த வகையில் குறிப்பிட்ட மூன்று ராசிகள் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது என கூறப்படுகின்றது. இதற்கான காரணத்தையும் அவர்கள் யார் என்பதையும் பதிவில் பார்க்கலாம். 

மறந்தும் கூட வெள்ளி மோதிரத்தை இந்த ராசிகள் அணிய கூடாது! ஏன் தெரியுமா? | 3 Zodiac Signs Should Not Wear Silver Rings

யார் அணிய கூடாது?

மேஷம்

  • மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் நெருப்பு தத்துவத்தைக் கொண்டவர். வெள்ளி குளிர்ச்சியான தன்மை கொண்டது. எனவே வெள்ளியை மேஷ ராசிக்காரர்கள் அணியும்போது, அது அவர்களின் ஆளுமையில் மந்தநிலையை ஏற்படுத்தும். அல்லது முடிவெடுப்பதில் குழப்பத்தை உண்டாக்கும். 

சிம்மம்

  • சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கம் மிகவும் உகந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் (வெள்ளி) உள்ள பகை அல்லது சமநிலைத் தன்மையால், வெள்ளி அணிவது இவர்களுக்குச் சில நேரங்களில்  மன அழுத்தத்தையோ அல்லது உடல்நலக் குறைபாடுகளையோ ஏற்படுத்த வாய்ப்க்களை உருவாக்கும் என கூறப்படுகின்றது. 

தனுசு

  • குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியினருக்குப் தங்கம் அணிவதே சிறந்தது. இவர்கள் வெள்ளி அணியும்போது அது இவர்களது அதிர்ஷ்டக் காரணியைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களும் வெள்ளியை தவிர்க்க வேண்டும்.