ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதற்கான முறைசாரா உத்தரவு ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஏவுகணைகள், ட்ரோன் இயந்திரங்கள் உள்ளிட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான யோசனையே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு குறித்த திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டமையினைத் தொடர்ந்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த வியாழக்கிழமை குறித்த ஆணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த செய்தியானது அமெரிக்க காங்கிரஸினால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கப்பெறும்வரை தாம் எந்தவொரு முன்மொழிவுகளை உறுதிப்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.