ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இளவரசராக திகழும் புதன், அறிவு, பகுத்தறிவு, வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாக கருதப்படுகிறார்.

ஒருவரின் சிந்தனைத் திறன் முதல் தொழில் வளர்ச்சி வரை பல அம்சங்களில் புதனின் இயக்கம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில்,  2026 ஆம் ஆண்டில் புதன் பகவான் மூன்று முறை வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.அதில் முதல் வக்ர பெயர்ச்சி ஜூன் 29 அன்று கடக ராசியில் தொடங்கி ஜூலை 24 வரை நீடிக்கிறது.பின்னர் புதன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.ஃ

அந்த கிரக பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்ட கதவுகளைத் திறந்து வைத்து, வெற்றி, பணவரவு மற்றும் புதிய வாய்ப்புகளை அள்ளித் தரப் போகிறது என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி புதன் வக்ர பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

கடகம்

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Retrograde In Cancer Who Get Huge Luck

கடக ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்கள் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். குறிப்பாக நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி.

இந்த கிரக மாற்றம் அவர்களின் நற்பெயர் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தற்போது சுமுகமாக முடிவுக்கு வரும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். துணையுடன் பரஸ்பர மரியாதையும் பொறுப்புணர்வும் வலுப்பெறும். சொத்து அல்லது நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கன்னி

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Retrograde In Cancer Who Get Huge Luck

கன்னி ராசியின் அதிபதியான புதன் வக்ர பெயர்ச்சி அடைவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறை மாற்றங்கள் அனுபவிக்கப்போகின்றார்கள்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறையில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதுடன், கடந்த கால முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த காலத்தில் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் உருவாகலாம். அதேபோல், நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.

தனுசு

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Retrograde In Cancer Who Get Huge Luck

 

தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த வக்ர பெயர்ச்சி பல நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் முன்னேற்றமும் வெற்றியும் காணப்படும்.

சமூகத்தில் அவர்களின் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி தொடர்பான சிக்கல்கள் படிப்படியாக குறைந்து, பொருளாதார நிலை மேம்படும்.

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு, எதிர்கால வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாககும். பணவரவு இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும்.