பாக்கியராஜ் மறைவை குடும்பத்தினர் தாங்கமுடியாமல் இருக்கும் நிலையில் அவரது பேரன் தாத்தாவை பூஜை அறையில் தேடியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியராஜ் மறைவு
இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் கடந்த வாரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பினை யாராலும் தாங்கமுடியாத நிலையில் தான் தற்போதும் இருக்கின்றனர்.
இவருக்கு சீடராக இருந்த பார்த்திபன் தான் முன்னே நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார். பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பார்த்திபன், அவருடன் இருந்த சில நினைவுகளையும், பேரன் குறித்த விடயத்தையும் கூறியுள்ளார்.
பாக்கியராஜிடம் 11வது உதவி இயக்குனராக சேர்ந்த பார்த்திபனுக்கு வெறும் 300 ரூபாய் தான் சம்பளமாம். அவரது தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், 270 ரூபாய் மருந்து வாங்குவதற்கு செலவாகிவிடுமாம்.

மீதமுள்ள 30 ரூபாய் தான் அவரது குடும்பத்தில் 30 நாட்களுக்கு செலவுக்காம். பாக்கியராஜிடம் சேர்வதற்கு முன்பு டப்பிங் பேசுவது, தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.
பார்த்திபன் சீக்கிரம் ஹீரோவாகிவிட வேண்டும் என்று தான் தாவணிக் கனவுகள் படத்தில் போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் நடிக்க வைத்துள்ளார்.
ஆனால் தனது குடும்ப சூழ்நிலை குறித்து பாக்கியராஜிடம் பார்த்திபன் கூறியது இல்லையாம். எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற மனநிலையில் இரவும், பகலும் அழுதுகொண்டே உழைப்பாராம். தனது நடிப்பினை பார்த்து பாராட்டி பல விமர்சனங்கள் வந்ததை பார்த்தை தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

பூஜை அறையில் தேடிய பேரன்
மரண தருவாயில் பாக்கிராஜிடம் பார்த்திபனை ஒப்படைத்தாராம் அவரது தந்தை. தந்தை இறந்த மூன்றாம் நாள் குருவின் அலுவலகத்திற்கு கீழே நின்றுள்ளார். மாடியிலிருந்து பார்த்த பாக்கியராஜ் அவரை வீட்டுக்குப் போக கூறியுள்ளார்.
பின்பு மறுநாளும் பிடிவாகமாக படிப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அலுவலகத்தில் இயக்குனரிடம் முரண்பாடுகள் வரும் போது கடிதம் எழுதுவதுண்டு. அதனை படித்த இயக்குனர் இனிமேல் கடிதம் எழுத வேண்டாம். எனக்கு படிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறினார்.
ஏனெனில் அந்த அளவிற்கு உருக்கமாக எழுதுவேன். ஒருமுறை அவரிடமிருந்து வெளியேறினேன். ஆனால் அவர் என்னை பார்த்து, நீ எப்போதும் போல் என்னிடம் வா, என்னுடைய படத்தை இயக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பாக்கியராஜ் தனது பேரனிடம் மிகவும் பாசமாக இருப்பாராம். தாத்தாவும், பேரனும் காரில் வெளியே செல்வது வழக்கமாம். பாக்கியராஜ் மறைந்த பின்பு, பேரனிடம் தாத்தா சாமியிடம் சென்றுவிட்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் குறித்த சிறுவன் பூஜை அறைக்குச் சென்று தேடி பார்த்துள்ளார். பாக்கியராஜ் சாருக்காக கடைசிவரை நின்றதை பலரும் தவறாக பேசி கருத்துக்களை பதிவிடுவதாக கூறி வேதனைப்பட்டுள்ளார் பார்த்திபன்.
