தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மனிதரின் தோற்றத்திற்கு தலைமுடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தலையில் முடி இல்லையென்றால் இன்றைய காலத்தில் பலரும் அவமானமாக கருதுகின்றனர்.

குறிப்பாக ஆண்களுக்கு 30 வயதுக்கு முன்பே முடிகள் கொட்டி விடுகின்றது. அதே போன்று பெண்களுக்கும் முடி கொட்டுதல் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.

இதனால் முடிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக சில மருந்துகளையும், எண்ணெய்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

தலைமுடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தலைமுடி அடர்த்தியாக வளர ஆசைப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும் | Follow This Tips To Grow Hair Thick

 

முடி அடர்த்தியாக வளரனுமா?

தலைமுடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு புரதம் மற்றும் வைட்டமின் டி உணவுகள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக வெந்தயம் மற்றும் கடுக்காய் கலந்த இயற்கையான முறைகளை பின்பற்றலாம்.

வெந்தயத்தினை இரவில் ஊற வைத்து காலையில் அதனை அரைத்து தலையில் ஹேர் பேக் போன்று குளிக்கும் போது முடி நன்றாக வளருமாம்.

தலைமுடி அடர்த்தியாக வளர ஆசைப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும் | Follow This Tips To Grow Hair Thick

மேலும் செம்பருத்தி பூ, நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் இவற்றினை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தடவலாம்.

முட்டை, பால், சீஸ் மற்றும் காளான் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் முடி வளர்ச்சி அதிகமாகும். பாதாம் போன்ற பருப்பு வகைகள், வெண்ணெய் இவைகளும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது.

முடி மிக அதிகமாக உதிர்ந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது ஆகும்.  

தலைமுடி அடர்த்தியாக வளர ஆசைப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும் | Follow This Tips To Grow Hair Thick