இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் கயாடு லோஹர் ட்ரெண்டிங்  சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் வருகின்றது. 

கயாடு லோஹர்

கன்னட திரையுலகில் வெளியான 'முகில்பேட்டை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர்.

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள் | Kayadu Lohar New Photoshoot In Saree Viral

முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பாலும், திரையில் தோன்றிய வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள் | Kayadu Lohar New Photoshoot In Saree Viral

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

'டிராகன்' திரைப்படத்தில் 'பல்லவி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த கயாடு லோஹரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அவரது திரைநேரம், சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்டது.

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள் | Kayadu Lohar New Photoshoot In Saree Viral

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றதோடு, எதிர்காலத்தில் கவனிக்க வேண்டிய நடிகைகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். தற்போது நடிகர் அதர்வாவுடன் இணைந்து 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல், நடிகர் சிம்புவின் 49-வது திரைப்படத்திலும் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோகர்... குவியும் லைக்குகள் | Kayadu Lohar New Photoshoot In Saree Viral

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அழகிய சேலை அணிந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த பகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.