முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.
ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்த பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் முதலில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கும், அங்கு வைக்கப்பட்டுள்ள பேனர்களும் காட்டப்படுகின்றன.
பின்னர், முகக்கவசம் அணிந்தபடி ஒரு காரின் அருகில் சங்கீதா நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பிறகு, அவர் காருக்குள் ஏறும் காட்சியும் காட்டப்படுகிறது.
ஆனால், இந்த வீடியோ உண்மையானது அல்ல என்பது தெரியவந்துள்ளது.
சங்கீதா ஏற்கனவே வேறு ஒரு திரைப்படத்தை பார்க்க சென்றபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஜனநாயகன் படத்தின் பேனர்களுடன் இணைத்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
