நோரா பதேஹி

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் திகழ்ந்து வரும் நடிகை நோரா பதேஹி, தன்னுடைய அறிமுக படத்தின் படப்பிடிப்பின்போது சக நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து பகிர்ந்துள்ளார்.

தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நோரா, என்னுடைய அறிமுக படத்தின் ஷூட்டிங்கின்போது சக நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

ஷூட்டிங்கில் எல்லைமீறிய நடிகர்..கன்னத்தில் பளார் விட்ட நடிகை நோரா பதேஹி.. | Nora Fatehi Slapped Co Star After He Misbehaved

கன்னத்தில் பளார்

இதனால் நான் கோபமடைந்து அவரை அறைந்தேன். அவரும் பதிலுக்கு என்னை அறைந்தார். அதன்பின் மீண்டும் நான் அவரை அறைந்தேன்.

பின் அவர் என் தலைமுடியை இழுக்க, நானும் அவரது தலைமுடியை பிடித்து இழுத்தேன். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கைகலப்பு ஏற்பட்டது. பின் இயக்குநர் தலையிட்டு எங்களை பிரித்தார் என்று நோரா பதேஹி தெரிவித்துள்ளார்.