விஜய் ரசிகர்களின் விருப்ப்ப்ட்டியலில் இன்றும் இடம்பித்துள்ள படங்களில் ஒன்றான சச்சின் படத்தில், “உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு..” எனக் க்யூட்டாக பேசி ரசிகர்களை கவர்ந்த குட்டி ப்ரீத்தி நினைவிருக்கிறதா? பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ப்ரீத்தி தற்போது ஒரே ஒரு ரீல் மூலம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளார்.

சச்சின் பட குட்ட ப்ரீத்தி

2005-ல் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான சச்சின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். காதல், காமெடி என ரசிகர்களை கவர்ந்த இப்படத்தில், குட்டித் தோழியாக வரும் ப்ரீத்தி கதாபாத்திரமும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

‘சச்சின்’ பட ப்ரீத்தியா இது? படு வைரலாகும் லேட்டஸ்ட் ரீல்! | Sachein Movie Child Actress Preethi Current Look

படத்தில் உடல்நலப் பிரச்சினையால் சில நாட்களில் உயிரிழக்கப் போகும் ப்ரீத்திக்கு, விஜய் கடைசி தருணங்களில் துணையாக இருந்து சிரிக்க வைப்பார். இந்த உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்த குழந்தையின் நிஜப் பெயரும் ப்ரீத்திதான்.

‘சச்சின்’ பட ப்ரீத்தியா இது? படு வைரலாகும் லேட்டஸ்ட் ரீல்! | Sachein Movie Child Actress Preethi Current Look

 

இந்நிலையில், தற்போது 20-களில் வளர்ந்த இளம் பெண்ணாக இருக்கும் ப்ரீத்தி, தனது சிறுவயது சச்சின் காட்சியுடன் இணைத்து சமீபத்தில் ஒரு ரீலை வெளியிட்டுள்ளார்.

வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.