பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா, அழகிய ஊதா நிற சேலையில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
VJ அஞ்சனா
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளமும், மவுசும் இருக்கிறதோ, அதேபோல் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் தற்போது தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

அந்த வரிசையில், ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் VJ அஞ்சனா.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காலத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அஞ்சனா, ‘கயல்’ பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு அழகான மகனும் உள்ளார். அம்மாவான பின்னரும் குறையாத கவர்ச்சி! திருமணத்திற்குப் பின்னரும், குறிப்பாக அம்மாவான பிறகும் தனது இளமைத் தோற்றத்தாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் அஞ்சனா.

சமூக வலைத்தளங்களில் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்நிலையில், அழகிய ஊதா நிற சேலையில் தேவதை போல ஜொலித்தபடி அஞ்சனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அம்மாவான பின்னரும் இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருக்கிறீர்களே!” என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அஞ்சனாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றன.
