5 Symptoms for Hernia: எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களிலே நாம் அதனை கண்டறிந்து அதற்கான மருத்துவத்தை அணுகும் பொழுது முற்றிலும் அதில் இருந்து நாம் குணமடையலாம். அந்த வகையில் குடல் இறக்கத்தை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்திலே நாம் அதற்குரிய அறிகுறிகளை கண்டறிந்து மருத்துவர்களை சந்திப்பது என்பது நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.
இன்றைய காலகட்டங்களில் அடிவயிற்றில் லேசாக வலி ஏற்பட்டால் அது குடல் இறக்கமாக இருக்குமோ என்று அச்சம் பலருக்கும் ஏற்படுகிறது. உண்மையில் குடல் இறக்கம் எனப்படும் ஹெர்னியா பிரச்சனையின் முக்கியமான ஆரம்ப கட்ட காலங்களில் வரக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.

1. அசௌகரியம் மற்றும் லேசான வலி:
ஹெர்னியா பாதிப்பு இருப்பவர்களுக்கு இடுப்பு ஒரு இடத்தில் மட்டும் ஒரு வித மந்தமான வலி இழுப்பது போன்ற உணர்வு அல்லது எரிச்சல் ஏற்படலாம் அதிலும் கனமான பொருட்களை நாம் தூக்கும் பொழுது அல்லது தும்மல் வருகின்ற பொழுது நீண்ட நேரம் நிற்கின்ற பொழுது மலம் கழிப்பதற்காக முயற்சி செய்கின்ற பொழுது இந்த அசௌகரியம் அதிகமாகும். இதை நாம் கட்டாயம் உதாசீனம் செய்யக்கூடாது.
2. கனத்த உணர்வு:
சமயங்களில் அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் ஏதோ ஒன்று கீழ்நோக்கி அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் நாள் முழுவதும் வேலை முடித்த பிறகு மாலையில் இந்த அழுத்தம் இன்னும் அதிகமாக காணப்படும்.
3. செரிமான மாற்றங்கள்:
குடல் இறக்கம் கீழ் வயிற்றில் இல்லாமல் மேல் வயிற்றில் ஏற்படும் போது நமக்கு எந்த கட்டியும் தெரியாது. இதற்கு பதிலாக நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏற்பம் அமிலத்தன்மை மேல்நோக்கி வருவது போன்ற நெஞ்சு அசௌகரியம் மற்றும் உணவு விழுங்குவதில் சில சிரமம் போன்ற செரிமான பிரச்சனைகள் மிகவும் ஆரம்ப கால அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

அதனால் அடிவயிற்றில் வலி ஏற்படுகின்ற பொழுது மருத்துவரை நாம் கட்டாயம் அணுக வேண்டும். நெஞ்செரிச்சல் ஏப்பம் அசிடிட்டி இருந்தாலும் அதை நான் உதாசீனம் செய்யக்கூடாது. இதோடு கட்டிகள் ஏதேனும் ஏற்பட்டு அவை திடீரென மிகவும் கடினமாக மாறுவது அல்லது தீவிரமான வலி ஏற்படுவது போன்று இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் லேசான வீக்கமும் வரலாம்.
அந்த வீக்கத்தை விரலால் மெதுவாக அழுத்தினால் அது உள்ளே தள்ள முடியாமல் போகலாம். அதேபோல், வீக்கம் இருக்கும் இடத்தில் தோல் பகுதி சிவப்பு ஊதா அல்லது கருமை நிறமாக மாறினாலும் கவனமாக இருக்க வேண்டும்.

கூடுதலாக கட்டுப்படுத்த முடியாத குமட்டல் அல்லது வாந்தி வருவது மலம் கழிக்கவோ அல்லது வயிற்று வாய்வு வெளியேற்றவும் முடியாமல் இருப்பது இதனுடன் கடுமையான வயிற்று வலியுடன் காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகள் இருப்பதும் நம் கவனமாக இருக்க வேண்டும்.
குடலிறக்கத்தை பொறுத்தவரை நாம் ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவரை அணுகி சரியான முறையில் பரிசோதனை செய்து மருத்துவம் எடுத்துக் கொள்கின்ற பொழுது நல்ல நிவாரணம் உண்டு. பிரச்சனை தீவிரம் அடைகிறது என்றால் வெளியில் வந்த குடல் பகுதி தசை சுவற்றுக்குள் சுற்றிக்கொள்ளும் பொழுது ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆதலால், அலட்சியமாக நாம் எடுக்கக் கூடாது.
